இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மீண்டும் உறுதியளித்தது இந்தியா!

158 0

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுடில்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) மிலிந்த மொரகொட மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலிய உற்பத்தி, விநியோகம் மற்றும் விநியோகத்தில் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய அமைச்சர் ஜூரிக்கு விளக்கமளித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசலை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.