புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ள 11 சுயாதீனமாக கட்சிகள்

340 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 அரசியல் கட்சிகள் ஒன்றினைத்து எதிர்வரும் மாதம் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை இனி நாட்டு மக்கள் தோற்றுவிக்கமாட்டார்கள் இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க வீரசுமன தெரிவித்தார்.

புதிய கூட்டணி தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தேசிய சுதந்திர முன்னணியி,லங்கா சமசமாஜ கட்சி, பிவிதுறு ஹெல உறுமய,இடதுசாரி ஜனநாயக முன்னணி,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,கம்யூனிச கட்சி உட்பட 11 அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் புதிய கூட்டணியை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் பெயர் மற்றும் தலைமைத்துவம் குறித்து பல சகல தரப்பினரது யோசனைகளும் கோரப்பட்டுள்ளன. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் பெயர் கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இதுவரை எவ்வித தீர்;க்கமான தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை.எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் கூட்டணியை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் கூட்டணியின் ஊடாக போட்டியிடுவோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை இனி நாட்டு மக்கள் தோற்றுவிக்கமாட்டார்கள்.நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை பலத்தை பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் குறுகிய காலத்திற்குள் இல்லாதொழித்து முழு நாட்டு மக்களையும் வீதிக்கிறக்கியுள்ளார்கள்.

நாட்டின் நலனை கருத்திற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தோம்.நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் செயற்படுவதில்லை என்றார்.