தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு

148 0

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று மாலை 2.30 மணியளவில்  இந் மாநாடு இடம்பெற்றது.

சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு எனும் தலைப்பில் நடந்த மாநாட்டில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, ஜே.வி.பியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க,

பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக்கும்.

ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் பொக்கற்றுக்குள் காணப்படுகின்றது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்தி.

பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமும்

“விமானம் ஓடாத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம், கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகிறது.

இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி. தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே என்றார்.

அத்துடன், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள்-ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம் இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தலொன்றை நடத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம் எனவும் .தன்போது தெரிவித்தள்ளார்.மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி தொடர்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே ஒருவித சந்தேகம் காணப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எமது தலைமுறை கடந்த காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டது.

தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாதமே வடக்கில் பிரபாகரன் ஆயுதமேந்த காரணமானது. எமது குழந்தைகளும் எதிர்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட வேண்டுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் பாரிய அழிவுகள் ஏற்பட்டது. வடக்கில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவை பெரும்பாலும் இன்று பொதுவான பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

நாம் அனைவரும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்நுழைய வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போதே நாங்கள் அனைத்து வகையான இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து செயற்ப்பட முடியும். வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற பேதமின்றி நாங்கள் ஒன்றிணைய வேண்டும். காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

எனது காணாமல்போனோரின் உறவுகள் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். எனது சகோதரன் காணாமல் போயிருந்தார். காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் உண்மையை தேடும் சபை ஒன்றை உருவாக்குமாறு நாம் கடந்த காலத்தில் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் அப்போது இருந்த அரசு அதனை ஏற்கவில்லை. மக்கள் தங்களுக்குரிய மொழியில் இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க உரிமை காணப்பட வேண்டும். இந்த நாட்டில் பாரிய திருப்புமுனை ஏற்படவேண்டும்” என்றார்.

Gallery Gallery Gallery