அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
இன்று வியாழக்கிழமை காலை 9.45 அளவில் திருக்கோணேஸ்வரம் கோவிலிற்கு விஜயம் செய்த அவர் அங்கு சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
இந்த வழிபாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பங்களாதேஷுக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்காவை வந்தடைந்த நிஷா பிஷ்வால், தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று கம்போடியாவிற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.