எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்,
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி இருக்கிறார்கள்.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால் அதனைப் பெறுவதற்காக நோய் நிலமை உள்ளவர்களும் எரிபொருளுக்காக மணிக்கணக்காக காத்திருக்கின்ற நிலைமையை நான் உணர்கிறேன்.
ஆகவே இயன்றவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு சமூக மட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொடை வள்ளல்கள் தற்போதைய தருணத்தில் நீராகாரத்தை வழங்கி உதவுமாறு வடமாகாண பிரதம செயலாளர் ஊடாக வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் உள்ளூராட்சி ஆணையாளர் மாற்றம் பிரதேச செயலகங்களுக்கும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.