ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தகர் தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அவர் இன்று (22) காலை 10.00 மணியளவில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக, தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கை மற்றும் வரி அனுமதி அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த 5 மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று (21) நிராகரித்துள்ளது.