உரிமையை மீட்க எழுதமிழா எழு எழு!
ஊமையென கிடந்து உரிமையை இழந்து
தேசம் பிரிந்து உறவினை தொலைத்து
உலகப் பந்தில் ஏதிலியென அலைந்து
துயிலும் போதும் தாயகத்தை எண்ணி எண்ணி
காலமென்றும் கலங்கி முடங்கியது போதும்
உரிமைக்காக எழுதமிழா எழு எழு!
மாவீரர் கனவுதனை நீ மிதித்து
காலமிட்ட கட்டளையினை நீ மறந்து
படுக்கையில் கிடந்து கோழையென வாழ்ந்து
தமிழன் வரலாறு உன்னை பழித்து
பாடையில் ஏறுபவன் மானத் தமிழனா
உரிமைக்காக எழுதமிழா எழு எழு!
மண்டியிடா வீரத்துடன் நீ எழுந்து
தடைகள் யாவும் தகர்ந்து விழும்
உலக வரைபடத்தில் தமிழீழமதை செதுக்கி
மிடுக்குடன் ஐநாவில் எம்கொடியை நிலைநாட்டி
புதிய வரலாற்றை நாம் படைத்திட
உரிமையை மீட்க எழுதமிழா எழு எழு!
மண்டியிடா வீரத்துடன் நீ எழுந்தால்
தடைகள் யாவும் தகர்ந்து விழும்
உலக வரைபடத்தில் தமிழீழமதை செதுக்கி
மிடுக்குடன் ஐநாவில் எம்கொடியை நிலைநாட்டி
புதிய வரலாற்றை நாம் படைத்திட
உரிமைக்காக எழுதமிழா எழு எழு!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
பா. லக்ஷன்