ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) மாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டெஸ் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 72 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 ஐ வசிப்பிடமாக கொண்ட 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் இன்று (21) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.