முல்லைதீவில் போரின்போது புதைக்கப்பட்ட எரிபொருட்கள் மீட்பு!

143 0

முல்லைத்தீவு உடையார் காட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே.31 ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது  நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு அமைய இன்று திங்கட்கிழமை (20) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய தோண்டப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் காவல்துறையினர் அதிகாரிகள், படைஅதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பெரல்கள் மீட்கப்பட்டுள்ளன அதில் எரிபொருட்கள் இருப்பது இனம்காணப்பட்டுள்ள நிலையில் அவை மண்ணெண்ணெய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு 7 பெரல்களில் இருந்தும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும்  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நாளை (21) முன்னிலைப்படுத்த   நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கந்தசாமி என்பவரின் காணியில் இருந்தே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன .

தோட்டம் செய்வதற்காக வீட்டு காணியின் பின்பக்கத்தில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்து, பனை மரத்தினை அகற்றும் போது அதில் நிலத்தில் பெரல் இனங்காணப்பட்டுள்ளது.

இவற்றை யார் வைத்தார்கள் என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள கந்தசாமி, போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது 2009 ஆம் ஆண்டு கடைசியில் நாங்கள் இடம்பெயர்ந்து போய்விட்டோம் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது 2011 ஆம் ஆண்டு மீள்குடியேறினோம். எங்கள் காணியில் எதுவித பொருட்களும் இனம்காணப்படவில்லை விவசாய நடவடிக்கைக்கு நிலத்தினை பண்படுத்தும் போதே இவை தென்பட்டுள்ளன என்றார்

கந்தசாமி என்பவரின் காணியில் இருந்தே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

தோட்டம் செய்வதற்காக வீட்டு காணியின் பின்பக்கத்தில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்து, பனை மரத்தினை அகற்றும் போது அதில் நிலத்தில் பெரல் இனங்காணப்பட்டுள்ளது.

இவற்றை யார் வைத்தார்கள் என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள கந்தசாமி, போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது 2009 ஆம் ஆண்டு கடைசியில் நாங்கள் இடம்பெயர்ந்து போய்விட்டோம் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது 2011 ஆம் ஆண்டு மீள்குடியேறினோம். எங்கள் காணியில் எதுவித பொருட்களும் இனம்காணப்படவில்லை விவசாய நடவடிக்கைக்கு நிலத்தினை பண்படுத்தும் போதே இவை தென்பட்டுள்ளன என்றார்.