வீட்டுப்பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வோருக்கான வயதெல்லையில் மாற்றம்

225 0

வீட்டுப்பணிப் பெண் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கான ஆகக்குறைந்த வயதெல்லை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வோருக்கான வயதெல்லையை 21 ஆக குறைக்கும் வகையில், சட்டம் திருத்தப்படவுள்ளது.

சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக செல்லும் ஆகக் குறைந்த தற்போது வயதெல்லை 25 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்ணாக செல்லும் வயதெல்லை தற்போது 23 என்பதுடன், ஏனைய நாடுகளுக்கு பணிப் பெண்ணாக செல்வதற்கான வயதெல்லை 21 ஆக காணப்படுகின்றது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நிய செலாவணியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.