நாம் அனைவரும் கூண்டுக்குள் இருக்கின்றோம்: எச்சரிக்கும் சனத் ஜயசூரிய

165 0

நாட்டு மக்களை பாதுகாப்பதே பொலிஸாரின் முதன்மையான பணி எனவும் அதனை நினைவில் வைத்து அவர்கள் செயற்பட வேண்டும் எனவும் இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவரான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது தற்போது பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

 

 

நாட்டில் கஷ்டப்படும் அப்பாவி மக்களை பாதுகாப்பதே தமது முதன்மையான பணி என்பதை பொலிஸார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் பொலிஸார் நியாயமாக நடந்துக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பொலிஸார் இருப்பது வன்முறையற்ற எதிர்ப்புகளை அடக்குவதற்காக அல்ல.

நாம் அனைவரும் கூண்டுகள் இருக்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முழு சூழ்நிலையும் எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் எனவும் சனத் ஜயசூரிய எச்சரித்துள்ளார்.

சனத் ஜயசூரிய மு்னனாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் பிரதியமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.