இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ தாண்டியது

161 0

ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு குரங்கு அம்மையால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.