ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு

382 0

presidential-commission-720x480காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு பெறுகின்றது.

காணாமல் போனோர் ஆணைக்குழுவானது கடந்த 2010ஆம் ஆண்டு அப்போது சிறீலங்காவின் அதிபராகவிருந்த மகிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவினால், காணாமல்போனோர் தொடர்பாக நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அது விரைவில் நிறைவு பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமல்போனோர் தொடர்பாக இதுவரை 20,000ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதில் சில முறைப்பாடுகள் பல தடவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இப்போதும் முறைப்பாடுகள் வந்தவண்ணமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை அதிகரிக்குமாறு சிறீலங்கா அதிபரிடம் கோரியுள்ளதாகவும், ஆனால் அவர் இதுபற்று இதுவரை எந்த முடிவுகளையும் வெளியிடவில்லையெனவும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும், இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விசாரணையை நிராகரித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.