நடுவானில் மோதவிருந்த விமானங்கள் – இலங்கை விமானியின் சாதுரியத்தினால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து

208 0

லண்டனில் இருந்து கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல் 504 என்ற விமானம் நேற்று (14) பாரிய விபத்திலிருந்து தப்பியமை தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானம், 275 பயணிகளுடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது,சுமார் 33,000 அடி உயரத்தில் குறித்த பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸூக்கு சொந்தமான விமானம் ஒன்று 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.

துருக்கி வான்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் 33,000 அடியில் இருந்து 35,000 அடி உயரத்திற்கு பயணிக்குமாறு துருக்கி – அங்காரா விமானக் கட்டுப்பாடு அறையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

விழிப்புடன் இருந்த இலங்கை விமானி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று 35,000 அடி உயரத்தில் தமது விமானத்திலிருந்து 15 மைல் தொலைவில் பயணிப்பதை கண்டறிந்து, அங்காராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கினார்.

யு.எல் 504 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் குறித்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் புறப்பட்டிருந்தது.