திருகோணமலையில் வீசிய கடும் காற்றினால் 38 வீடுகள் சேதம்

187 0

திருகோணமலை – வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூரல் பகுதியில் இன்று (14) மாலை வீசிய காற்றினால் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

உப்பூரல் பிரதேசத்தில் பலத்த மழையுடன் காற்றினால் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மீனவர்களின் வள்ளங்கள் சில உடைந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை

 

இதேவேளை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையினால் ஏற்பட்ட சேத விபரங்களை வெருகல் பிரதேச செயலகம் ஊடாக திரட்டி வருவதாகவும், இதுவரைக்கும் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.

திருகோணமலையில் வீசிய கடும் காற்றினால் 38 வீடுகள் சேதம்

அத்துடன் பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்து தகவல்களை பெற்று மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பேரில் வெருகல் பிரதேச செயலாளரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.