ஹர்சாவின் கருத்தை நிராகரித்தார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

172 0

இலங்கைக்கு உதவுமாறு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை ஏற்பதற்கு சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மறுத்துவிட்டார் என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்திருப்பது உண்மையல்ல என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஹர்சா டி சில்வா எனது நீண்டகால நண்பர் நாங்கள் அடிக்கடி சந்திப்போம்,அவரை சந்திப்பது எனக்கு விருப்பமான விடயம் ஆனால்  ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையி;ல்லை என முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.

பலநாடுகள் இலங்கைக்கு உதவ தயாராகவுள்ளன என நான் நம்புகின்றேன் உதவிகள் கிடைக்கும் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.