மைத்திரியின் வீட்டிற்கு சென்று சீனத் தூதுவர் சந்திப்பு

155 0

சீனத் தூதுவர் சீ சென்ஹொங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்  இடையிலான சந்திப்பு  இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு நேற்று  (10) பொலனறுவை புதிய நகரிலுள்ள மைத்திரிபால சிறிசேன இல்லத்தில் இடம்பெற்றது.

சீனத் தூதுவர் தனது வீட்டிற்கு வந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவை மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து சீனதூதுவருக்கு விளக்கினார்.

தனது ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் மிகவும் நட்புறவுடன் செயற்பட முடிந்ததாகவும், அதன் மூலம் சீனாவின் பெருமளவிலான உதவிகள் இலங்கைக்கு கிடைத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சீனத் தூதுவரிடம் தெரிவித்தார்.
<p>இங்கு கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர், பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள இலங்கைக்கு நட்பு நாடு என்ற வகையில் தேவையான ஆதரவை வழங்குவதாக&nbsp;குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் விசேட நன்கொடையாக நாளைய தினம் மருந்துப்பொருட்களை வழங்கவுள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல விசேட உதவித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்

அண்மையில் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பாக ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினுக்கு மைத்திரிபால சிறிசேன எழுதிய கடிதத்தை சீனத் தூதுவர் பாராட்டினார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே சீன அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த சீனத் தூதுவர், அதற்குத் தேவையான ஆதரவை எதிர்பார்ப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்ச்சந்திப்பில் சீனத் தூதுவர் மற்றும் தூதுவர்கள் குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.