யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றார்கள்

307 0

இன்று யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றார்கள். வாள்வெட்டுக்கள் தொடர்பில் நாளாந்தம் பத்திரிகையில் பார்க்க முடிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு இன்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,வவுனியா இளைஞர்கள் அவ்வாறு இல்லை. ஒரு சிலர் தவறு செய்கிறார்கள். ஆனால் அதிகமாக எமது இளைஞர்கள் நல்ல முறையில் செயற்படுகிறார்கள். விளையாட்டுத் துறையில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.வுனியா மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு இளைஞர்களிடமே உள்ளது. கிரிக்கெட் போன்று உதைப்பந்தாட்ட துறையிலும் சாதனைகள் இடம்பெற வேண்டும்.

எமது மாவட்ட இளைஞர்கள் விளையாட்டுத்துறை மூலம் எமது மாவட்டத்திற்கு பெருமை தேடித்தருவார்கள் என நம்புகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத் தலைவர் எஸ்.ஜோன்சன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதுடன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதித் திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 20 கழகங்கள் மற்றும் 03 பாடசாலைகள் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கச் செயலாளர் எஸ்.நாகராஜன், அந்த அமைப்பின் பொருளாளர் லரீப், விளையாட்டுக் கழக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.