நீதிமன்ற தீர்பை விமர்சித்த ட்ரம்ப்

281 0

தம்முடைய உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை அமெரிக்க ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.

அண்மையில் 7 முஸ்லிம் நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

மேலும் சிரியா அகதிகள் உள் நுழைய நிரந்தர தடையையும் விதித்தார்.

இது அமெரிக்காவில் அதிருப்தியை ஏற்படுத்தி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு இடைகால தடை விதித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் அரசாங்கத்தின் அதிகாரமிக்க ஆணையின் மீது நீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.