எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அரச சேவையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளுக்கு செலுப்படியாகாது என அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, போக்குவரத்து பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது