முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள்

218 0

கடந்த 1998 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10 ஆம் திகதி, சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை பத்து  மணிக்கு சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட நினைவிடத்தில் உணர்வு பூர்வமாக இவ் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை, குறித்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளை  பறிகொடுத்த தந்தையாரான புஸ்பநாதன்  ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் திருவுருவப் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில்  பிரதேச சபை உறுப்பினர்களான ஜோன்சன் , ஜீவன் தாக்குதலில் தமது உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.