மீனவர்களின் பிரச்சினை – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

299 0

இலங்கை, இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினையை அக்கறையுடனான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் பி. சிதம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக பாம்பன் பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்தது.

இவ்வாறு உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் இந்தப்பிரச்சினையில் பயனளிக்காது.

இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தையே வெற்றியளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.