கன்னியாகுமரிக்கான திட்டப்பணிகள்… ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் விஜய் வசந்த் கோரிக்கை

219 0

சென்னையில் இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் செயல் மேலாளர் ஆகியோரை, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ரயில்வே துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

ரயில் நிலையங்களின் மேம்படுத்தல், ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்துதல், புதிய ரயில்கள் மற்றும் ரயில்களின் நிறுத்தங்கள் ஆகியவை கோரப்பட்டது. கோரிக்கைகளை ஆய்வு செய்து ஆவன செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.