இலங்கை பிரதமர் சீனா செல்லவுள்ளார்.

362 0

இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க இந்த வருடத்தின் மே மாதம் அளவில் சீனாவின் பீஜிங் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கான இலங்கை தூதுவர் இதனை நேற்று தெரிவித்தார்.

சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே பிரதமரின் இந்த பயணம் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட கைத்தொழில் வலையத்திற்கு எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமையை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் சீனாவிற்கு இலங்கையில் எழுப்பப்பட்ட முதல் எதிர்ப்பு என்று கருதப்படுகிறது.

எனவே இந்த சம்பவம் தொடர்பிலும் பிரதமர் சீனாவிற்கு பதிலளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.