அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்களுடன் பொது செயலாளர் சசிகலா கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
அதிமுக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் இன்று அதிமுக தலைமையகத்தில் நடைபெற இருக்கிறது. அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் சசிகலா கலந்து கொள்ளும் ஒவ்வொரு கூட்டமும் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் எம்எல்ஏ கூட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும், விரைவில் தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்று கொள்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனினும் இவ்வாறு வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் அரசாங்கம் மற்றும் எம்எல்ஏக்களுடன் நேரடி தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்றே நடைபெற இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
மக்களின் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் அரசாங்கத்துடன் தீர்க்கப்பட வேண்டிய சூழல் இருக்கும். இவற்றை சரி செய்ய மந்திரிகள் நேரடியாக சந்தித்து அவற்றை தீர்க்க வேண்டி இருக்கிறது. சசிகலா முதல்வராவதை தவிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் கனவு திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது என்றும் கூறப்படுகின்றது.