கொடைக்கானல் பெரியாற்றில் கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் அவலம்

119 0

கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு–ட்பட்ட பேத்துப்பாறை கிராமப்பகுதியில் அதிக மழை பெய்யும் காலங்களில் பெரியாற்றில் கரையைக் கடக்கமுடியாமல் பொது–மக்கள் அவதியுறுவது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற சமயங்களில் ஆற்றைக் கடந்து விவசாயப் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பது, அத்தியாவசியத் தேவைகளுக்காக ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் தவிப்பது என்பது பொதுமக்களின் தீராத பிரச்சினையாக உள்ளது.

இது குறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையில் இருந்தனர்.

இந்நிலையில் கொடைக்கானல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பெரியாறு வரை சேத–மடைந்துள்ள சாலைகள் சீரமைப்பு மற்றும் பெரியா–ற்றின் குறுக்கே விரைவாக பாலம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

அவற்றுக்கு நிதி ஒதுக்கி விரைவாக பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டு–க்கு கொண்டு வரப்படும். இனி வரும் காலங்களில் கயிறு கட்டி மக்கள் ஆற்றைக் கடக்கும் நிலை ஏற்படாது என்றார். இதனால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.