அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மிகப் பெரிய அதிகரிப்பு

194 0

அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ கிராம் அரிசி 500 ரூபாவுக்கும் அதிகமாக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பருப்பு ஒரு கிலோ கிராம் 1000 ரூபாவையும் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.

சீமேந்து ஒரு மூடை 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு மேலாக விரைவில் மின் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.