சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான 65,000 மெற்றிக் தொன் உரம் ஒரு மாத காலத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு ; விநியோகிக்கப்படும்.
அதேவேளை உணவு தட்டுப்பாட்டின் தாக்கத்தை இலங்கை நேரடியாக எதிர்கொள்ள நேரிடும்.மேலும் விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வரவு-செலவு திட்டத்தின் ஊடாக நட்டஈடு வழங்கப்படும் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் 7 மே் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உணவு தட்டுப்பாடு மற்றும் சிறுபோக விவசாயம் தொடர்பில் விசேட உரையாற்றுகையிலேயே ; அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்
உலக உணவு தட்டுப்பாட்டின் தாக்கத்தை இலங்கை நேரடியாக எதிர்கொள்ள நேரிடும்.சிறுபோக விவசாயத்தில் முழுமையான விளைச்சலை
பெற முடியாது.பெரும்போக விவசாயத்தை வெற்றிக்கொள்ள சிறந்த திட்டங்களை முறையாக செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
;சிறுபோக விவசாயத்தில் நெற்பயிர்ச்செய்கையை அதிகளவில் முன்னெடுக்க அவதானம் செலுத்தபபட்டுள்ளது.உணவு பற்றாக்குறைஏற்படும் ; என எதிர்வு கூறப்பட்டதை தொடர்ந்து ஒரு தரப்பினர் தேவைக்கு மேலதிகமாக உணவு பொருட்களை தற்போதிலிருந்து சேமித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
பல்வேறு காரணிகளினால் விவசாய நடவடிக்கையில் ஈடுப்படாமலிருந்த விவசாயிகள் உணவு தட்டுப்பாடு சவாலை வெற்றி கொள்ளும் நோக்கில் தற்போது விவசாய நடவடிக்கைளில் ஈடுப்பட ஆரம்பித்துள்ளார்கள்.
எரிபொருள் விநியோகத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
உரப் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்தியாவிடமிருந்து 65 ,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தை பெற்றுக்கொள்ள இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த உர தொகையை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ளவும்,விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கமைய யூரியா உரத்தை விநியோகிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சேதன பசளை திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.உயர் தரமான சேதன பசளைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் தேவையான அரிசி தற்போது கையிருப்பில் உள்ளது.டிசம்பர் மற்றும் ஒக்டோபர் மாதத்திற்கு தேவையான அரிசி இறக்குமதி செய்ய நேரிடும் ; என்றார்.
இதன் போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இயற்கையானதல்ல,ஜனாதிபதியின் தவறான தீர்மானங்கள் விவசாயத்துறையை வீழ்ச்சிக்குள்ளாக்கி உணவு தட்டுப்பாடு சவாலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
விவசாயத் துறை வீழ்ச்சினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா,அவ்வாறாயின் நட்டஈடு எப்போது வழங்கப்படும் என ; விவசாயத்துறை அமைச்சரை நோக்கி கேள்வியெழுப்பினார்.
விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிச்சயம் நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் நிவாரணம் வழங்க முடியாது.வரவு-செலவு திட்டத்தின் ஊடாகவே நட்டஈடு வழங்க அவதானம் செலுத்தப்படும் என நளின் பண்டார விற்கு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளித்தார்.