கடன் எல்லையை மேலும் 1000 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றம்

191 0

தேசிய திறைச்சேரி கட்டளைச் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் பாராளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்ட  3000 பில்லியன் ரூபா கடன் எல்லையை மேலும் 1000 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை விவாதமின்றி இன்று ;நிறைவேற்றப்பட்டது.

1923 ,08ஆம் இலக்க ; தேசிய திறைச்சேரி கட்டளைச் சட்டம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கமைய பாராளுமன்றத்தினால் நிறைவேற்றிக்கொள்ளப்படும் யோசனைகளுக்கமைய கடன் நிலைமை தீர்மானிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு திறைச்சேரி கேள்வி பத்திரம் வெளியிடுவதற்காக பாராளுமன்றத்தினால் இறுதியாக அனுமதி வழங்கப்பட்ட கடன் எல்லை 3000 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதுடன்,2022 ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் செலுத்த வேண்டிய முழு திறைச்சேரி கேள்வி பத்திரங்களின் பெறுமதி 2,860 பில்லியன்  ரூபாவாக காணப்பட்டது.

நாட்டின் ; கடன் நிலையை கீழ் நிலைக்கு தரப்படுத்தியதை தொடர்ந்து சர்வதேச சந்தைக்கான பிரவேசம் மட்டுப்படுத்தப்பட்டது.இதனால் தேசிய மட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்களில் கடன் பெற வேண்டிய நிலை நிதியமைச்சுக் ஏற்பட்டது.1969 .இலக்கம் 01 என்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2022.04.09ஆம் திகதி ; வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய அரச சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு பிரேரணை மீதா ன விவாதம் நாளை இடம்பெறும்.