யூரியா உர கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்

173 0

பெரும் போக செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, 2022/23 பெரும் போக செய்கைக்கு தேவையான யூரியா உரம் குறித்த கடன் தொகையை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.