சம்மாந்துறையில் சீனிக்கு வரிசை

216 0

சம்மாந்துறை ச.தொ.ச.வில் சீனி வாங்குவதற்காக மக்கள் கடந்த இரண்டு நாட்களாக வரிசையில் நிற்கிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை சீனி வழங்கப்பட்டது. இதில், ஒருவருக்கு ஒரு கிலோ சீனி மட்டுமே வழங்கப்பட்டது. பழுப்பு நிற சீனி ஒரு கிலோ 177 ரூபாய்க்கும், வெள்ளை சீனி 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெளி கடைகளில் ஒரு கிலோ சீனி 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.