இந்தியாவிடம் உதவி கேட்டார்களா தலிபான்கள்?

196 0

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதுகுறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்தபின், தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றியவுடன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். கடந்த ஆண்டு ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள். சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர்.

தலிபான் எதிர்ப்புக் குழுவினர், முந்தைய ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேடித்தேடி பழி தீர்க்கப்படுகின்றனர். தலிபான்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.