ரஸ்யாவுடனான உறவுகள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் ஏரோஃப்ளோட்விவகாரத்திற்கு தீர்வு காணவேண்டும் !

218 0

ரஸ்யாவுடனான உறவுகள் பாதிக்கப்படுவதற்கு முன்னர்  ஏரோஃப்ளோட் விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமைச்சர் தினேஸ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் ரஸ்யாவின் ; விமானம் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பான விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு இலங்கைஅதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் தினேஸ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு நாடுகள் மத்தியிலான உறவுகளிற்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.