இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இன்று திருகோண மலைக்கு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
திருகோணமலை செல்லும் அவர், ஸ்ரீ கோணேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
இதனையடுத்து அவர் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்களையும் நிஷா பீஸ்வால் சந்திக்கவுள்ளார்.