சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

180 0

மே 09 சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்ற கைது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டததரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அதன் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி காலிமுகத்திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் காணொளிகளை ஆதாரமாக கொண்டு பொலிசார் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மே 09 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்  கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் பாரபட்சமாக இடம்பெறுவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நம்பத்தகுந்த ஆதராங்கள் இல்லாமல், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால்  கூறப்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.