பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்னிப்பிடிய ‘வியன்புர’ பகுதியில் வீட்டுத்திட்டம்

158 0

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல கட்டடத்தொகுதிக்கு பதிலாக  பன்னிப்பிடிய ‘வியன்புர’ வீட்டுத்தொகுதியில் வீடுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய பன்னிபிடிய வியன்புரவ வீடமைப்பு செயற்திட்டத்தின் பி கட்டடத்தில் 101 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்குமிட வசதிக்காக மாதிவெல பகுதியில் 1994ஆம் ஆண்டு கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டது. இந்த வீட்டுத்தொகுதி தற்போது பாவிக்க முடியாத நிலையில் உள்ளது

மாதிவெல கட்டடத்தொகுதி அமைய பெற்றுள்ள நிலப்பரப்பை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கி,நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு செயற்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய இந்த வீடுகளுக்கு பதிலாக வேறு இடத்தில் புதிய இடத்தில் வீடுகளை வழங்குவது தொடர்பில் 2021.06.23ஆம் திகதி பாராளுமன்ற தெரிவு குழு கூட்டத்தின் போது யோசனை முன்வைக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன் விற்பனை என்ற அடிப்படையில் பன்னிபிடிய பகுதியில் 500 வீடுகளை உள்ளடக்கிய வீட்டுத்தொகுதியையும்,வியன்புர மத்திய தரப்பு வீட்டு செயற்திட்டம் பி கட்டடத்தில் ஒரு வீடு அடிப்படையில் 101 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது.ஒரு வீட்டின் பெறுமதி 14.2 மில்லியன்  தொடக்கம் 19.8 மில்லியன் என அப்போது மதிப்பிடப்பட்டது.

2022.05.09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்து வீடுகளை இழந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக அடிப்படையில் வழங்குமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வீடமைப்பு அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

புன்ன பன்னிபிடிய,வியன்புர வீடமைப்பு செயற்திட்டத்தின் பி கட்டடத்தொகுதியில் உள்ள வீடுகளை 101 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கல் மற்றும் அதன் கட்டமைப்பு பாராளுமன்ற செயலாளருக்கு பொறுப்பாக்கபபட்டுள்ளது.

வியன்புர வீடமைப்பு செயற்திட்டத்தின் 101 வீடுகள் நிர்மானிப்பிற்கான மொத்த செலவிற்காக மதிப்பிடப்பட்ட 1,795.34 மில்லியன் நிதியை திறைசேரியில் இருந்து பெற்றுக்கொள்ளல் மற்றும் அதில் 50 சதவீதத்தை ஒப்பந்த அடிப்படையில் செலுத்த 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மத்திய திறைசேரியினால் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுவிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.