லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் இருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்

163 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

4.6.2022
04.30: உக்ரைன் மீது ரஷியா நடத்திய போரால் உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் சின்னாபின்னமாகி உள்ளன.
உக்ரைனில் ரஷியா ஏற்படுத்தி உள்ள சேதங்களை அந்நாட்டின் மந்திரிசபை மதிப்பிட்டுள்ளது. 600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என உக்ரைன் மந்திரிசபை தெரிவித்துள்ளது.
00.50: ரஷிய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலந்தில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.