முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் குறித்து ரணிலின் கருத்து

168 0

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு ஆதரவளிக்க பிரதமர் ஒப்புக்கொண்டார்.
நாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியதோடு, எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து முச்சக்கரவண்டி தொழிற்துறையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.