தொலைத்தொடர்புக் கட்டணங்களும் அதிகரிப்பு

210 0

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத் தொடர்பு வரி 11.25 சத வீதத்திலிருந்து 15 சத வீதமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தொலைபேசி அழைப்புக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இருப்பினும்,  இணையக் கட்டணங்கள் 4 சத வீதத்தால் மட்டுமே அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வற் வரி 8 சத வீதத்திலிருந்து 12 சத வீதமாக ஆக அதிகரிப்பதன் மூலம் தொலைபேசிக் கட்டணம் சுமார் 8 சத வீதம் வரை உயரும்  எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மொபைல் சேவை வழங்குநர்களுக்கு நாளை முதல் மாதக் இணைப்புக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் ப்ரீ-பெய்டு பயனர்கள் அவர்கள் ரீலோட் செய்யும் தொகைக்கு குறைந்த அளவிலான டேட்டா மற்றும் அழைப்பு நேரங்களைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்று கட்டங்களாக வரிகளை அதிகரிப்பதற்கான திட்டத்தை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.