மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி

361 0

இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை அடுத்த சில நாட்களில் குறைக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் அரிசியின் விலையை 76 ரூபாவிற்கு கீழ் விற்பனை செய்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் இருந்து,உடனடியாக அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டு ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.