பிரதேச செயலாளருக்கு எதிராக ரஞ்சன் முறைப்பாடு

352 0

திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (03) ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அண்மையில் திவுலபிட்டிய பிரதேசத்தில் மணல் அகழக்கப்படும் சம்பவம் தொடர்பாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் திவுலபிட்டிய பிரதேச செயலாளருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, அந்த உரையாடலின் போது காரசாரமான வசனங்கள் பிரயோகிக்கப்பட்டதுடன், தம்மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் கூறியிருந்தார்.

இதன்படி, குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விபரங்களுடன் தம்மால் பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.