சைட்டம் நிறுவனம் தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் மருத்துவர்கள் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினார்கள் என தெரிவித்து குரல் எழுப்புவதற்கும் அது குறித்து செயற்படுத்துவதற்கும் கெமுனு விஜேரட்னவுக்கு அதிகாரம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பேருந்துகளை ஓடும் விதத்தில் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக கதைப்பதற்கு கெமுனுவுக்கு உரிமையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் இந்த கருத்தை வெளியிட்டார். இந்த விடயம் மாணவர்களினுடையது என்பதன் காரணமாக அவர்களின் எதிர்காலத்திற்கு பங்கம் ஏற்படாதவகையில் தீர்மானம் எடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், சைட்டம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது இல்லை எனவும், மேன்முறையீடு மூலமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பேரேரா தெரிவித்தார்.