இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கறுப்பு கொடிகளுடனும், கறுப்பு பதாதைகளுடனும் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது
வடமாகாண சபையின உறுப்பினர்களாகிய எம்.கே.சிவாஐிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் தலைமையில் சிவில் அமைப்பின் ஆதரவாளர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், ஒன்றிணைந்து எமக்கு இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் எமக்கு கறுப்பு தினம் என்று தெரிவித்து கவனயீர்ப்பு ஒன்றை முன்னேடுத்துள்ளனர்.
இதில் 05 அம்ச கோரிக்கையினை வலியூறுத்தி இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட மற்றும் பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 20000 தமிழர்களின் நிலை பற்றி அரசே பதில் சொல்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்.
தமிழ் மக்களின் ஆக்கிரமித்த நிலங்களை உடனடியாக ஒப்படை. புதிய நிலங்களை ஆக்கிரமிக்க எடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடு.
இனப்படுகொலை, போர்க் குற்றங்களான நீதி விசாரணையை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படை.
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண வழி செய் –
போன்ற கோரிக்கையினை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு இடம்பெற்றது. மாவட்ட செயலகத்திற்கு உள்ள செல்லாமல் தடுத்து வைப்பதற்காக பொலிஸார் பலத்த பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.