பொருளாதார மந்தநிலை நன்மை பயக்கும் : உலகின் மிகப் பெரிய செல்வந்தர் கூறுகிறார்

181 0

பொருளாதார மந்தநிலை பொருளாதாரத்திற்கு நன்மை பயப்பதாக அமையும். ஏனெனில் அது  வீட்டிலிருந்து பணியாற்றுவதில் அபிமானம் கொண்டவர்களையும்  முட்டாள்தனமான வர்த்தக உரிமையாளர்களையுமே பாதிக்கும் என உலகின் மிகப்  பெரிய செல்வந்தரான எலொன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேரந்த கோடீஸ்வரரான  எலொன் மஸ்க்கின் (50 வயது) ; சொத்து மதிப்பு 218 பில்லியன் அமெரிக்க டொலராகும். அவர் தனது அபிப்பிராயங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம்  செய்வதற்கு  ஒருபோதும் தயங்கி நின்றதில்லை.

இந்நிலையில் அவர்  அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை (26.5.2022)& ; தன்னால் பதிவேற்றம் செய்யப்பட்ட டுவிட்டர் செய்தியிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மந்த நிலை உண்மையில் சிறந்த ஒரு விடயமாகும்;. முட்டாள்கள் மீது பண மழை நீண்ட காலமாக பொழிந்து வருகிறது. அதனால் சில திவால்கள் இடம்பெற வேண்டிய தேவையுள்ளது என அவர் கூறினார்.

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வீடுகளிலிருந்து பணியாற்றுவது தூண்டப்பட்டுள்ளமையால் நீங்கள் கடுமையாக பணியாற்ற வேண்டிய தேவை இல்லை என நீங்கள் கருதக் கூடாது என அவர் தெரிவித்தார். அமெரிக்க சொத்து முகாமைத்துவ கம்பனியொன்று  வரி சேகரிப்பதற்குப் பொறுப்பான உள்நாட்டு வருமான சேவைப் பிரிவு பண வீக்கத்தை ஈடுசெய்ய வட்டி வீதத்தை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் மேற்படி பொருளாதார மந்தநிலையானது 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள்  வரை நீடிக்கலாம் என எலொன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.