கட்சியை பலப்படுத்த திட்டம்- மக்கள் நீதி மய்ய 12 அணிகளை அழைத்து ஆலோசிக்க கமல் முடிவு

174 0

2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அடிப்படையில் கூட்டம் அமைகிறது.மக்கள் நீதி மய்ய கட்சியை தொடங்கிய கமல் பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலை அடுத்தடுத்து சந்தித்தார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட அக்கட்சி தேர்தலில் தோல்வியை தழுவியது.பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.

இந்த நிலையில் கட்சியை பலப்படுத்த கமல் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் 12 சார்பு அணிகள் உள்ளன. மாணவர், மருத்துவர், விவசாயம், ஆதிதிராவிடர் என பல்வேறு அணிகள் உள்ளன. அவற்றின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக ஆதிதிராவிடர் அணியின் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் மவுரியா தலைமையில் நடந்தது.

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மற்ற 11 அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

11 வாரத்தில் இக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இறுதியாக அனைத்து அணி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்துகிறார்.

2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அடிப்படையில் இக்கூட்டம் அமைகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்து உள்ள நிலையில் அணி நிர்வாகிகைள அழைத்து கமல் பேச இருப்பதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.