கொழும்பிலிருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய மூன்று பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் உள்ளாடைகளில் தங்கக் கட்டி (24 காரட்) தங்கச் சங்கிலி (22 காரட் ), தங்க நகைகள் ( 24 காரட்) ஆகியவற்றைத் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் மொத்த எடை 1.6 கிலோகிராம் என்றும், அவற்றின் மதிப்பு ரூ.72.4 லட்சம் என்றும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து.
தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக புளோரிடா பத்மஜோதி, நோனா பரினா ஆகிய இலங்கைப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.