ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்க பெலாரஸ் நாடு முடிவு செய்துள்ளது.
27.5.2022
04.30: ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்த பெலாரஸ் பகுதிகளை பயன்படுத்தி வந்தது. எனினும் இந்த போரில் இதுவரை ரஷியாவிற்கு ஆதரவாத பெலாரஸ் களம் இறங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் உக்ரைனின் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
03.30: மரியுபோல் துறைமுக பகுதியில் இருந்து நேற்று ஐந்து வெளிநாட்டு கப்பல்கள் வெளியேறியதாக ரஷிய வெளியுறவுஅமைச்சகம்தெரிவித்துள்ளது. அசோவ் துறைமுக பகுதி வழியாகவும், கருங்கடலில் உள்ள கெர்சன் மற்றும் ஒடெசா வழியாகவும் வெளிநாட்டு கப்பல்கள் உக்ரைனில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்படும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது. இதையடுத்து பாதுகாப்பு வழி உருவாக்கப்பட்ட நிலையில், ஐந்து வெளிநாட்டு கப்பல்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.