எமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிக்கொள்ளவதாக அகில இலங்கை பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து அந்த சங்கத்தினர் மேலும் குறிப்பிடுகயைில்,
நாளாந்தம் எரிபொருள்களின் விலை அதிகரித்துச் செல்வதனால் தமது தொழில்களை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.
எரி‍பொருள் விலையேற்றத்தால் 5000 இற்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாது கிடப்பில் உள்ளன.
எமக்கான நிவாரணம் எதுவும் இதுவரை அரசாங்கத்தினால் கிடைக்கப் பெறவில்லை. இந்நிலைமைய தொடருமானால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை.
கடற்பரப்பில் பலநாள் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபட்டு, மீன்பிடித்துறை ஊடாக நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு நாம் பெரும் சக்தியாக இருந்து வருவதுடன், அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுப்பதிலும் முன்னின்று உழைத்து வருகின்றோம் என்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.
மேலும், நாம் தொழில்க‍ளை விட்டுச் செல்வதன் ஊடாக இந்த தொழில்களை நம்பியுள்ள பலருக்கும் தொழில்வாய்ப்பு இல்லாமல் போகும் அபாய சூழல் உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.