ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தக் கொள்கைகள் மட்டுமே ஏற்றுமதித் தொழிலுக்கு உதவ முடியும் என்றார்.
>இன்று (26) காலை வங்கிகளின் தலைவர்களை சந்தித்த போதே பிரதமர் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் எழுபது நாடுகள் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறிய பிரதமர் விக்கிரமசிங்க, அந்த நாடுகளில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன் ஒத்திவைப்பு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.