அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கும் விசேட கலந்துரையாடலொன்று நாளை நடைபெறவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நாளை மாலை 4.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பித்துள்ளார்.
உரிய திருத்தத்திற்கு கட்சிகளின் சம்மதத்தைப் பெறுவது அவசியமானதனால் முதலில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு முன்மொழியப்பட்டது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் ஏற்கனவே அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் நாளைய தினம் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்டதை அடுத்து, அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.